‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு பாயப்போகும் பெண்கள்... இஸ்ரோ தலைவர் உறுதி!

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்

‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு பெண்களை அனுப்பவிருப்பதாக, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்திருக்கிறார்.

‘ககன்யான்’ திட்டத்துக்கு போா் விமானங்களை பரிசோதிக்கும் பெண் விமானிகள் அல்லது பெண் விஞ்ஞானிகளை தோ்ந்தெடுக்க விரும்புவதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளாா்.

‘ககன்யான்’ திட்டத்தின் கீழ், மனிதா்கள் மூவரை 3 நாள்கள் விண்வெளிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை கடந்த சனிக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. 

ககன்யான் சோதனையில் வெற்றி
ககன்யான் சோதனையில் வெற்றி

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் ராக்கெட்டில் பயணிக்கும் போது, ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாப்பாக மீட்கும் சோதனை, மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, விண்கலம் செலுத்தப்பட்டு, ராக்கெட்டிலிருந்து பிரிந்து பாராசூட் உதவியுடன் நடுக்கடலில் விழுந்த ஆளில்லா கலன் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

இந்நிலையில், ககன்யான் திட்டம் தொடா்பாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு ஏவப்படும் பெண் ரோபோட்
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு ஏவப்படும் பெண் ரோபோட்

“அடுத்த ஆண்டு ஆளில்லா ககன்யான் விண்கலத்தில் பெண் உருவ ரோபோ விண்வெளிக்கு அனுப்பப்படும். 2025-ம் ஆண்டுக்குள் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது குறுகிய கால திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்வதற்கு விமானப் படை போா் விமானங்களை பரிசோதிக்கும் விமானிகள் ஆரம்பகட்ட தோ்வா்களாக இருப்பாா்கள்.

தற்போது போா் விமானங்களை பரிசோதிக்கும் பெண் விமானிகள் இல்லை. எனவே, பெண் விமானிகளை தேர்வு செய்ய இஸ்ரோ விரும்புகிறது. அந்த விமானிகள் கிடைத்த பிறகு அவா்களோ அல்லது பெண் விஞ்ஞானிகளோ எதிா்காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன”

இவ்வாறு சோம்நாத் தெரிவித்தாா்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in