இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய்... அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Updated on
2 min read

இந்தியாவின் ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அன்று தனக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற செயற்கைக்கோள் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. தற்போது ஆதித்யா-எல்1 விண்கலம் லாங்கிராங் பாயிண்ட் எனப்படும் பகுதியில் சூரியனை சுற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி அளித்தார். அப்போது ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட அதே தேதியில், தனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதித்யா எல்1 விண்கலம்
அதித்யா எல்1 விண்கலம்

சந்திராயன்-3 திட்டத்தின் போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்ததாகவும், ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லாததால் தான் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஆதித்யா-எல்1 விண்ணுக்கு செலுத்தப்பட்ட அன்று எடுக்கப்பட்ட ஸ்கேனில், தனக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் அடுத்த கட்டமாக நடத்தப்பட்ட தொடர் ஸ்கேன்களில் மரபணு காரணமாக தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததாகவும் இதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், 5வது நாளில் மீண்டும் இஸ்ரோ பணிகளுக்கு தான் திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், இருப்பினும் தொடர்ந்து அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை செய்து உடல் நலனை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அறிவியல் குவிமயமான இஸ்ரோவின் தலைவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்தில் போதை ஆசாமி ரகளை; வைரலாகும் வீடியோ!

இனி... 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை!

சவுரவ் கங்குலியின் பயோபிக் படத்தில் நடிகர் ரஜினி... குஷியில் ரசிகர்கள்! எகிறும் எதிர்பார்ப்பு!

பாஜக வேட்பாளரின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in