தேர்தல் 2024 | மகனை ஸ்கூலுக்கு அனுப்பற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு... நடிகர் வடிவேலு பேச்சு!

வடிவேலு, கலைஞர்
வடிவேலு, கலைஞர்

“தன் மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு கலைஞர்” என சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

வடிவேலு
வடிவேலு

சென்னை பெரம்பூரில் நடைப்பெற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசியது வைரலாகி வருகிறது.

"ஸ்டாலின் அய்யா முதலில் திமுகவின் தொண்டன். தொண்டன் தான் இப்போது முதல்வர் ஆகியுள்ளார். திருமணமான பத்து நாட்களிலேயே சிறை சென்றுள்ளார். கலைஞர் அய்யாவும் தனது மகனை ஸ்கூலுக்கு அனுப்புவது போல சிறைக்கு அனுப்பியுள்ளார். ஸ்டாலின் எனப் பெயர் வைத்ததாலேயே அவருக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போனதாம். அதற்கெல்லாம் அசராத கலைஞர் ஸ்டாலின் என்ற பெயரை மாற்றாமல் பள்ளியை மாற்றியுள்ளார்” எனப் பேசினார்.

வடிவேலு
வடிவேலு

மேலும், “’புலிகேசி படத்தில் ராஜா குதிரையில் போவதால் பிரச்சினை வந்து, படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. கலைஞரிடம் சொன்னேன். அவர் ஆ. ராசாவிடம் பேசி இதை சரிசெய்து ஒருவாரத்தில் படத்தை ரிலீஸ் செய்து கொடுத்தார். நான் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகன். ஆனால், கலைஞரின் தீவிர பக்தன், விசுவாசி” என்றார்.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று அங்கு சுற்றிப் பார்த்தார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் மூலம் கலைஞரிடம் உரையாடி மகிழ்ந்தார். இது சமாதி இல்லை சன்னதி என்றும், திமுகவினருக்கு இதுதான் குலதெய்வ கோயில் என்றும் நெகிழ்ந்தார்.

 இதையும் வாசிக்கலாமே...


11ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது... 8.20 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!

டொனால்ட் டிரம்பை தோற்கடித்து நிக்கி ஹாலே முதல் வெற்றியைப் பெற்றார்!

கோர விபத்து; அப்பளமாய் நொறுங்கிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

‘அரபிக்குத்து’ கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் ஆல்பம்!

தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in