இந்திய பயணம் ஒத்திவைப்பு... எலான் மஸ்க் - பிரதமர் மோடி சந்திப்பு தள்ளிப்போவது ஏன்?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். அவர் தனது பயணத்தை ஒத்தி வைத்த காரணம் குறித்த சர்ச்சைகள் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ்(ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக இருந்தது. இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். முன்னதாக கடந்த வாரம் எலான் மஸ்க் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதற்காக எலான் மஸ்க் தொடர்ந்து முனைப்பு காட்டி வந்த நிலையில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எலான் மஸ்கின் இந்திய பயணத்தின் போது மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்வார் எனவும் தொழில்துறையினரிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது.

டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி மையத்தை 2 - 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவில் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி மையத்தைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கார்களுக்கான இறக்குமதி வரியை சமீபத்தில் மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதேபோல், அதிவேக இணைய இணைப்புக்கான ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இந்நிலையில், எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துரதிர்ஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

முன்னதாக பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என பதிவிட்டிருந்த எலான் மஸ்க், தற்போது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். தற்போது மக்களவைத் தேர்தல் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே தேர்தல் நேரத்தில் இந்தியா வந்தால் சரியாக இருக்காது என எலான் மஸ்க் நினைத்துள்ளார் என சொல்லப்படுகிறது. எனவே தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியாவில் பயணம் மேற்கொள்வதே சிறப்பானதாக இருக்கும் என எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த பின்னர் இந்தியா வர திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in