இவிஎம் - விவி பாட் 100 சதவீதம் சரிபார்க்க கோரிய வழக்கு... தேர்தல் ஆணையத்திடம் கேள்விக்கணைகளை வீசிய உச்ச நீதிமன்றம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவி பாட் இயந்திரம் தொடர்பான வழக்கு விசாரணை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவி பாட் இயந்திரம் தொடர்பான வழக்கு விசாரணை

இவிஎம் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், விவி பாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக சரிபார்க்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) பதிவாகும் வாக்குகளையும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை (விவி பாட்) இயந்திரம் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக எண்ணி சரிபார்க்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் பலர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கன்ட்ரோல் யூனிட், வாக்குப்பதிவு இயந்திரம், விவி பாட் இயந்திரம்
கன்ட்ரோல் யூனிட், வாக்குப்பதிவு இயந்திரம், விவி பாட் இயந்திரம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

கடந்த 18-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்புக்காக இந்த வழக்கை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவை வருமாறு:

1. மைக்ரோ கண்ட்ரோலர் கன்ட்ரோல் யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளதா அல்லது விவி பாடில் நிறுவப்பட்டுள்ளதா? இது கட்டுப்பாட்டு பிரிவில் நிறுவப்பட்டுள்ளது என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்தோம். ஆனால், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இது விவி பாடில் நிறுவப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

2. நிறுவப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை புரோகிராம் செய்யக்கூடியதா? (இதில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு மைக்ரோ கன்ட்ரோலரை மாற்ற முடியாது என்பதைக் குறிக்கிறது)

3. எத்தனை சின்னங்கள் லோடிங் யூனிட்டுகள் உள்ளன?

4. ஸ்டோரேஜ் கால வரம்பு 45 நாட்களாக உள்ளதால் தேர்தல் மனுவை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 30 நாட்கள் ஆகும். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 81-ன் படி, தேர்தல் மனு வரம்பு காலம் 45 நாட்கள் ஆகும்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அதன்படி, ஸ்டோரேஜ் காலம் அதிகரிக்கப்பட வேண்டும். தேர்தல் மனு வரம்பு காலம் 45 ஆக இருந்தால், இது 60 ஆக இருக்கலாம்.

5. இவிஎம் இயந்திரங்களைப் பாதுகாப்பதில், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவி பாட் ஆகிய இரண்டும் முத்திரைகளைக் கொண்டுள்ளனவா?

இவ்வாறு நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு இன்று மதியம் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

இதையும் வாசிக்கலாமே...

'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in