ராமர் கோயில் விழாவை முன்னிட்டு ஜன.22 அன்று பங்குச்சந்தை விடுமுறை... பதிலாக இன்று முழுநாள் வேலை

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, ஜன.22 அன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்று முழுநாள் செயல்பாட்டினை தொடர்ந்து வருகிறது.

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவை, சிறப்பு ஏற்பாடாக இன்றைய தினம்(ஜன.20/சனி) காலை 9 மணி முதல் மாலை 3:30 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். மேலும் அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ஜனவரி 22 திங்களன்று இந்தியாவின் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பு மற்றும் வேலை நாள் தொடர்பான குழப்பங்களின் மத்தியில், தேசிய பங்குச் சந்தையின் செய்தித் தொடர்பாளர் அதிகாரபூர்வமாக இவற்றை தெளிவுபடுத்தி உள்ளார்.

ராமர் கோயில் விழாவை முன்னிட்டு விடுமுறை.
ராமர் கோயில் விழாவை முன்னிட்டு விடுமுறை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜன.22 அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக பங்குகள், கடன் மற்றும் பணச் சந்தைகளுக்கான வர்த்தகம் திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும் என தேசிய பங்குச்சந்தையின் சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மட்டுமன்றி மத்தியபிரதேசம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா தினத்தன்று முழு நாள் விடுமுறையை அறிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு சார்பில் ஜன.22 அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சனிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றின் வர்த்தக நேரம் தொடர்பாக குழப்பங்களும், தெளிவின்மையும் நிலவி வந்தன. இரு பங்குச்சந்தைகளும், சிறப்பு அமர்வுகளின் ஏற்பாடாக சனிக்கிழமை வர்த்தகத்திற்கு திறக்கப்படுவதாக தகவல் பரவி இருந்தது. சனிக்கிழமை அன்று பங்குச்சந்தையில் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் பிரிவில் சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு நடைபெறுவதாகவும், அந்த உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவித்தன.

பங்குச்சந்தை வர்த்தகம்
பங்குச்சந்தை வர்த்தகம்

தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை ஆகியவை தொடர் வீழ்ச்சி கண்டதை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவை தெரிவித்தன. வழக்கமாக பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடையும்போது, சிறப்பு ஏற்பாடாக பங்குச்சந்தை சற்றும் நேரம் மூடப்படுவது நடந்திருக்கிறது. இணைய இணைப்பு மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஏதேனும் சிக்கல் எழுந்து வர்த்தகம் பாதிக்கப்படும்போது, மாலை வர்த்தகம் முடியும் நேரத்தை நீட்டிப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் விடுமுறை நாளான ’சனிக்கிழமையும் பங்குச்சந்தை வர்த்தகம் குறிப்பிட்ட மணி நேரங்கள் செயல்பாட்டில் இருக்கும்’ என்ற குழப்பத் தகவலில் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உதயநிதி குறித்த இரட்டை அர்த்த பேட்டி: மன்னிப்பு கேட்க முடியாது என அண்ணாமலை திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து வைரமுத்து குரலில் 'டீப் ஃபேக்' வீடியோ: பொறியாளர் கைது!

நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்...பதறவைக்கும் வீடியோ!

பாஜகவில் சேர பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியை உதறியவருக்கு அதிர்ச்சி!

திருவிழா கோலம் பூண்டது சேலம்... திமுக இளைஞரணி மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்றே தொடங்குகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in