நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்...பதறவைக்கும் வீடியோ!

நடுவானில் தீப்பிடித்தபடி செல்லும் விமானம்
நடுவானில் தீப்பிடித்தபடி செல்லும் விமானம்

அட்லஸ் ஏர் விமான நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு விமானம்  நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் எஞ்சினில்  ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்து எரிந்தபடியே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லஸ் ஏர் சரக்கு விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுள்ளது. ஆனால், விமானம் புறப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் எஞ்சினில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக விமானத்தில் தீப்பிடித்தது.  இதையடுத்து அதே விமான நிலையத்திற்கு  அவசர அவசரமாக திரும்பிய அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து அட்லஸ் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "வழிகாட்டு நெறிமுறைகளை விமான குழுவினர் பின்பற்றியுள்ளனர். மியாமி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் பாதுகாப்பாக திரும்பியது. நேற்று பிற்பகுதியில் நடந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும்" எனக் கூறப்பட்டுள்ளது.

விமானம்
விமானம்

சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும்  இந்த சம்பவத்தின் உறுதிப்படுத்தப்படாத வீடியோவில்  நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் இடது பக்க இறக்கையில் தீப்பற்றி கொண்டு, அதிலிருந்து புகை வெளியே வருவது தெரிகிறது. இந்த விமானத்தில் இருந்தவர்களுக்கு எவ்வித காயங்களும் இல்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இதில் விமானக் குழுவினர் எத்தனை பேர் இருந்தனர் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவில் நடுவானில் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் சரக்கு விமானம் எஞ்சின் கோளாறால் தீப்பிடித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in