வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியா சொந்தமாக விண்வெளி நிலையத்தை கொண்டிருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.1800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் ககன்யான் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “2035ம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும். விண்வெளியின் அறியப்படாத விஷயங்களை ஆய்வு செய்ய இது உதவும். இந்த அமிர்த காலத்தில், இந்திய விண்வெளி வீரர் நமது சொந்த ராக்கெட்டில் சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவார். 21ம் நூற்றாண்டில் இந்தியா, தனது திறனைக் கொண்டு உலகை வியக்க வைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில், நாம் சுமார் 400 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளோம். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, 33 செயற்கைக்கோள்கள் மட்டுமே ஏவப்பட்டன. ககன்யானில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உலகின் முதல் 3வது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் ககன்யான் நமது விண்வெளித் துறையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லப் போகிறது. விண்வெளித் துறையில் இந்தியாவின் வெற்றி, நாட்டின் இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மையை விதைத்து வருகிறது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பாலிவுட் இயக்குநர்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்... ‘எதிர்நீச்சல்’ நடிகை மதுமிதா கைது?!
ஏடிஎம். உள்ளே கர்ப்பிணி மனைவியைக் கொன்ற சந்தேகக் கணவன்!
காவலுக்கு நின்ற போலீஸார்... நகையைப் பறித்து கொண்டு ஓடிய அவலம்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
சசிகலா இல்லம் கோயில்; கருணாநிதி நினைவிடம் தாஜ்மஹால்... அடிச்சுத் தாக்கும் ரஜினி!