உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு திருப்புமுனை... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு!

”புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது சமூகத்துக்கு ஒரு திருப்புமுனை தருணம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

'குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முற்போக்கு பாதை' என்ற தலைப்பில் டெல்லியில் இன்று மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்று பேசியதாவது:

“புதிய குற்றவியல் நீதிச் சட்டங்களை இயற்றுவது சமூகத்துக்கு ஒரு திருப்புமுனை தருணம். இந்தியா தனது குற்றவியல் நீதி அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கு தயாராக உள்ளது. குடிமக்களாகிய நாம் அவற்றை ஏற்றுக்கொண்டால் புதிய சட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும்.

மாநாட்டில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வோல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர்
மாநாட்டில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வோல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர்

புதிதாக இயற்றப்பட்ட சட்டங்கள், குற்றவியல் நீதிக்கான இந்தியாவின் சட்ட கட்டமைப்பை புதிய யுகமாக மாற்றியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், குற்றங்களைத் திறம்பட விசாரிப்பதற்கும் மிகவும் தேவையான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் இச்சட்டங்களை இயற்றுவது, இந்தியா மாறி வருகிறது மற்றும் முன்னகர்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும், தற்போதைய சவால்களைச் சமாளிக்க புதிய சட்டக் கருவிகள் தேவை.”

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசால் புதிதாக இயற்றப்பட்ட பாரதிய நியாயா சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா சட்டம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இருப்பினும் இதில், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் வாகன ஓட்டுநர்கள் வழக்கு தொடர்பான விதிகள் உடனடியாக செயல்படுத்தப்படாது. இந்த மூன்று சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 21 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவற்றுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டிசம்பர் 25-ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in