இந்திய மசாலா தடை விவகாரத்தில் தலையிடும் மத்திய அரசு... தூதரகங்களிடம் விரிவான ரிப்போர்ட் கோரும் வர்த்தக அமைச்சகம்

தடைக்கு ஆளான எவரெஸ்ட் - எம்டிஹெச் மசாலாக்கள்
தடைக்கு ஆளான எவரெஸ்ட் - எம்டிஹெச் மசாலாக்கள்

எம்டிஹெச், எவரெஸ்ட் ஆகிய இந்தியாவின் மசாலாப் பொருட்களுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அவை தொடர்பான முழுமையான விவரங்களை இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் கோரியுள்ளது.

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இந்தியாவின் 2 பிரபலமான மசாலா பிராண்டுகளின் விற்பனைக்கு தடை அறிவித்தது, இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்த மசாலா நிறுவனங்களின் தயாரிப்புகள் வெளிநாட்டில் தடை செய்யப்பட்டதை அடுத்து, அவற்றின் தரக் கவலைகள் காரணமாக, உணவுப் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்களிடம் கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

எவரெஸ்ட் மீன் கறி மசாலா
எவரெஸ்ட் மீன் கறி மசாலா

இந்த நிராகரிப்பின் பின்னணியிலான தொழில்நுட்ப விவரங்கள், பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சரக்குகள் நிராகரிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை அனுப்புமாறு, அங்குள்ள இந்திய தூதரகங்களுக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 2 மசாலா குழுமங்களின் தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிய தர சோதனைக்கும் நேற்று உத்தரவிட்டது.

இந்த ஆய்வுகளில் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு உள்ளதா என்று சோதிக்கப்படுகின்றன. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் அதன் நீண்டகால வெளிப்பாடு புற்றுநோயை உண்டாக்கும் என்பதாலும் இந்த ஆய்வும் அதனைத் தொடர்ந்த நடவடிக்கையும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிராந்தியத்தின் உணவுப் பாதுகாப்பு மையத்தின்படி, 2 இந்திய பிராண்டுகளின் பல மசாலா கலவைகளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான, எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் கண்டறிந்தனர். ஹாங்காங் உணவு ஒழுங்குமுறை நிறுவனம், எம்டிஹெச் மசாலாப் பொருட்களான 'மெட்ராஸ் கறி தூள்', 'சாம்பார் மசாலா தூள்' மற்றும் 'கறி தூள்' ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆராய்ந்ததை வெளிப்படுத்தி உள்ளது.

எம்டிஹெச் மசாலா
எம்டிஹெச் மசாலா

இவற்றோடு எவரெஸ்ட் குழுமத்தின் 'ஃபிஷ் கறி மசாலா'விலும், வழக்கமான உணவுக் கண்காணிப்புத் திட்டத்தின் ஆய்வில் பூச்சிக்கொல்லி இருப்பதை உறுதி செய்ததாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்தே சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு 2 இந்திய மசாலா பிராண்டுகளையும் கடைகளில் இருந்து அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம், எத்திலீன் ஆக்சைடை குரூப் 1 புற்றுநோய் உருவாக்கும் காரணியாக வகைப்படுத்தியுள்ளது. உணவு ஒழுங்குமுறையில் உள்ள பூச்சிக்கொல்லி எச்சங்கள் அடங்கிய உணவை உட்கொள்வது இந்த வகையில் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை உட்கொண்டவர்கள் மற்றும் அவை தொடர்பாக தங்கள் உடல்நலம் குறித்து கவலை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரான மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் மனித உயிர்களைப் பறித்தது தொடர்பான சர்ச்சை சற்று அடங்கிய சூழலில், இந்தியாவில் தயாரான மசாலாப் பொருட்கள் கடல்கடந்து தடைக்கு ஆளாகி இருப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு களங்கம் சேர்க்க முயல்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in