தனிநபரை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறீர்களா? - மேற்கு வங்க அரசிடம் நீதிபதிகள் சுளீர் கேள்வி!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஒரு தனிநபரின் நலன்களைப் பாதுகாக்க ஒரு மாநில அரசு எவ்வாறு உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும் என சந்தேஷ்காலி விவகாரத்தில் மேற்கு வங்க அரசிடம் உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. அங்கு விவசாய நிலங்களை சட்டவிரோதமாக நீர்நிலைகளாக மாற்றியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது, சந்தேஷ்காலியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு போன்ற குற்றச்சாட்டில் அம்மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி, ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷேக் ஷாஜகான்
ஷேக் ஷாஜகான்

இந்நிலையில் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், "சந்தேஷ்காலி விவகாரத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த 10ம் தேதி பிறப்பித்த உத்தரவானது, எந்தவொரு வழிகாட்டுதல்களும் இல்லாமல் சிபிஐ-க்கு தேவையான ஆதரவை வழங்குமாறு உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு பொதுவான உத்தரவை வழங்கியுள்ளது.

இது சந்தேஷ்காலி பகுதியில் எந்தவொரு குற்றத்தையும் விசாரிக்க மாநில காவல்துறையின் அதிகாரங்களை அபகரிப்பதற்கு சமம். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவானது காவல் துறை உள்பட முழு அரசு இயந்திரத்தையும் சோர்வடைய செய்வதாக உள்ளது. எனவே, சந்தேஷ்காலி விவகாரத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம், சிபிஐ
கொல்கத்தா உயர்நீதிமன்றம், சிபிஐ

அப்போது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நீதிபதிகள் எந்த தடையையும் விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், "ஒரு தனி நபரின் நலன்களைப் பாதுகாக்க மாநில அரசு எவ்வாறு உச்ச நீதிமன்றத்தை அணுக முடியும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து இந்த வழக்கு கோடை விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in