சிறுதானியங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு... வரி குறைக்கப்பட்ட பொருட்கள் எவை?

சிறுதானியங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு... வரி குறைக்கப்பட்ட பொருட்கள் எவை?

சிறுதானிய மாவு உணவு தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதைய 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது, பல பொருட்களின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிறு தாணியங்களின் மாவை கொண்டு பேக் செய்யப்பட்ட, லேபிள் செய்யப்பட்ட உணவுகளுக்கு தற்போது 18 சதவீத வரி விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இதை 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சிறு தாணியங்களின் மாவு பேக்கேஜ் செய்யப்படாமவ் உதிரியாக (Loose package) விற்பனை செய்யப்படும் போது ஜீரோ சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

வெல்லப்பாகு அதாவது molasses மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மில்களில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை விரைவாக வழங்க உதவும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், மக்கள் அருந்தும் மதுவுக்கு மறைமுக வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்தது. மேலும் தொழில்துறை பயன்பாட்டிற்கான கூடுதல் நடுநிலை ஆல்கஹால் (ENA) தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) பெறும் என்று கவுன்சில் முடிவு செய்தது.

சிறுதானியங்கள்
சிறுதானியங்கள்

ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு இந்திய ரயில்வே வழங்கும் அனைத்து சேவைகளையும் முன்னோக்கி கட்டண நெறிமுறையின் (forward charge mechanism) கீழ் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வே துறை உள்ளீட்டு வரிக் கடன் (Input tax credit) பெற முடியும். பாலியஸ்டர் ஃபிலிம் / பிளாஸ்டிக் பிலிம் மூலம் செய்யப்படும் போலியான ஜரி நூல் அல்லது நூல் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

பார்லி-யை மால்ட்டாக பதப்படுத்துவதற்கான பணிகளுக்கு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.

சிறுதானிய மாவு, அதன் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகிறது, இந்தியாவில் சுகாதார உணர்வுள்ள நுகர்வோர் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பதன் மூலம், இந்த சத்தான உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு மேலும் சென்றடைவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in