உச்சம் தொட்ட ஜிஎஸ்டி... மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடி ரூபாய் வசூல்!

ஜிஎஸ்டி வசூல்
ஜிஎஸ்டி வசூல்

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.

ஜிஎஸ்டி வசூல்
ஜிஎஸ்டி வசூல்

புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலாகும்.

2023-24ம் நிதியாண்டுக்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது.

மத்திய அரசின் நிதி அமைச்சகம்
மத்திய அரசின் நிதி அமைச்சகம்

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மார்ச் மாதத்துக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் இரண்டாவது மிக உயர்ந்த வசூலாக ₹ 1.78 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 11.5 சதவீத வளர்ச்சியுடன், உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து ஜிஎஸ்டி வசூல் 17.6 சதவீதமாக கணிசமாக உயர்ந்ததால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரை ஜிஎஸ்டி வசூலில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஈட்டப்பட்டதே முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர திரும்ப செலுத்தப்பட்ட தொகை (ரீஃபண்ட்) ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in