உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழா... இந்தியாவின் தேர்தலை ‘டூடுல்’ வெளியிட்டு கொண்டாடும் கூகுள்

கூகுள் டூடுல்
கூகுள் டூடுல்

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குவதை முன்னிட்டு, டூடுல் வெளியிட்டு கூகுள் தளம் சிறப்பித்துள்ளது.

7 கட்ட வாக்குப்பதிவுகளை உள்ளடக்கிய மக்களவைத் தேர்தல் 2024-ன் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. இதன் பொருட்டு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்றைய தினம், வாக்காளர்கள் திரளாக வாக்களித்து வருகின்றனர்.

உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேசமான இந்தியா, அதன் பிரதமரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யும் மற்றுமொரு ஜனநாயத் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த வகையில் உலகம் முழுக்க இந்தியாவின் நடப்புத் தேர்தல் கவனம் ஈர்த்துள்ளது. அந்த கொண்டாட்டத்தின் அங்கமாக கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

ஆள்காட்டி விரலில் அடையாள மை
ஆள்காட்டி விரலில் அடையாள மை

வாக்குச்சாவடியில் வாக்களித்தோருக்கு அதன் அடையாளமாக ஆள்காட்டி விரலில் இடப்படும் மை உடன், இன்றைய கூகுள் டூடுல் இடம்பெற்றுள்ளது. நாடெங்கும் வாக்காளர்கள் வாக்களித்த கையோடு அதன் அடையாளமான மை தோய்ந்த விரலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மக்களின் அந்த உற்சாக உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் இன்றைய கூகுள் டூடுல் அமைந்துள்ளது.

கூகுள் டூடுல் என்பது கூகுள் தேடுபொறி தளத்தில் இடம்பெற்றிருக்கும் கூகுள் லோகோவில் வடிமைக்கப்படும் சுவாரசியமான மாற்றமாகும். உலகின் பிரபலமான விடுமுறை நாட்கள், முக்கியமான தேதிகள், வரலாற்று சிறப்புகள், சமூகத்தில் தாக்கம் செலுத்தும் நபர்கள் உட்பட பல்வேறு உள்ளூர் மற்றும் உலகளாவிய தீம்களுடன் கூகுள் டூடுல் இடம்பெறுவது வழக்கம்.

மக்களவைத் தேர்தலில் வாக்களித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
மக்களவைத் தேர்தலில் வாக்களித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த டூடுல்கள் படம், அனிமேஷன், ஸ்லைடுஷோ, வீடியோ அல்லது பயனருடன் ஊடாடும் வகையிலான விளையாட்டு என நாள்தோறும் வித்தியாசமான தோற்றங்களில் இடம்பெறுகின்றன. இந்த கூகுள் டூடுலுக்கு என தனி ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய கூகுள் டூடுல், இந்தியாவின் தேர்தலை பிரதிபலித்ததில் மேலும் சிறப்பு பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in