அதிர்ச்சி... ரூ.33.35 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல்... அத்தனையும் சாக்பீஸ் பவுடர்!

உத்தரகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள்
உத்தரகண்ட் மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

தெலங்கானா மாவட்டத்தில், மருந்து சப்ளை செய்யும் நிறுவனம் ஒன்றில் நடைப்பெற்ற சோதனையில் சுமார் ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. பரிசோதனையில் அத்தனையும் சாக்பீஸ் பவுடரும், ஸ்டார்ச் மாவும் நிரப்பப்பட்ட மருந்துகள் என்பது வெளியாகி அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தெலங்கானாவில் போலி மருந்து சப்ளை செய்தவர்கள்
தெலங்கானாவில் போலி மருந்து சப்ளை செய்தவர்கள்

தெலங்கானா மாவட்டத்தில், மெக் லைஃப் சயின்சஸ் என்ற நிறுவனம் போலி மருந்துகளை மருந்து கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இது குறித்த விசாரணையில், செம் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தில் தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் (டிசிஏ) அதிரடி சோதனையில் ஈடுபட்டு, ரூ.33.35 லட்சம் மதிப்புள்ள போலி மருந்துகளைப் பறிமுதல் செய்தனர். இந்த மருந்துகள் அனைத்தும் சுண்ணாம்பு தூள் மற்றும் ஸ்டார்ச் மாவு சேர்த்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த மருந்துகளை மருந்துக்கடைகளுக்கு நிறுவனம் சப்ளை செய்து வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மெக் லைஃப் சயின்சஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து மருந்துகளும் தெலங்கானா மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் (டிசிஏ )விலிருந்து "ஸ்பூரியஸ் மருந்து எச்சரிக்கை மற்றும் நிறுத்து-பயன்பாட்டு அறிவிப்பு"க்கு உட்படுத்தப்பட்டது.

போலி மருந்துகள்
போலி மருந்துகள்

முன்னதாக, இதேபோன்ற வழக்கில், சிப்லா மற்றும் கிளாக்சோ ஸ்மித் க்லைன் போன்ற புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் லேபிள்களுடன் சுண்ணாம்பு தூள் அடங்கிய போலி மருந்துகளை தயாரித்து சப்ளை செய்ததாக உத்தரகாண்டில் செயல்பட்டு வந்த மருந்து உற்பத்தி பிரிவு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Augmentin - 625, Clavum - 625, Omnicef-O 200, Montair - LC ஆகிய மருந்துகளைப் போலியாக தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்து அதிர செய்துள்ளனர். மேலும் தீவிர விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in