விமான பயணிகள்
விமான பயணிகள்

அதிர்ச்சி... இந்த நாட்டுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு இனி 1000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கப்படும்!

எல் சால்வடார் தேசம், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகளுக்கு 1000 அமெரிக்க டாலர் சிறப்பு கட்டண விதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அமெரிக்க தேசங்களில் ஒன்று எல் சால்வடார். கடந்த வாரம் இந்த தேசம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று ஆப்பிரிக்க மற்றும் இந்திய பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தியா மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து எல் சால்வடார் வருவோர் இனி 1000 அமெரிக்க டாலரை சிறப்பு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் விமானம்
பயணிகள் விமானம்

இந்திய, ஆப்பிரிக்க பயணிகளை அடையாளம் காண்பதற்காக, அவர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்குமாறு, எல் சால்வடாருக்கு பறக்கும் விமான நிறுவனங்களுக்கு அந்நாடு அறிவுறுத்தி உள்ளது. 1000 டாலர் கட்டணம் என்பது வாட் வரியோடு சேர்த்து, 1,130 அமெரிக்க டாலராக வசூலிக்கப்படும்.

இப்படி வசூலாகும் சிறப்பு கட்டணங்களைக் கொண்டு, எல் சால்வடாரின் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை அந்நாடு மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்க தேசமான எல் சால்வடார் வழியே அமெரிக்காவை குறிவைத்து புலம்பெயர்வோர் அதிகரித்திருப்பதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இதுவும் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணி
விமான பயணி

செப்டம்பரில் முடிவடைந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 32 லட்சம் ஆகும். எல் சால்வடார் போன்ற தேசங்களின் வழியாகவே அமெரிக்காவுக்கு புலம் பெயர்வோர் குறிவைத்து பயணிக்கிறார்களாம். அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைககளை அமெரிக்காவுடன் இணைந்து எல் சால்வடார் தொடங்கியுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்திய மற்றும் ஆப்பிரிக்கர்களை குறிவைத்து எல் சால்வடார் கட்டணம் விதித்திருப்பது கண்டனங்களுக்கும் ஆளாகி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

x
காமதேனு
kamadenu.hindutamil.in