அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே நிலநடுக்கம்... அதிர்ச்சியில் மக்கள்!

அந்தமான் அருகே நிலநடுக்கம்
அந்தமான் அருகே நிலநடுக்கம்

அந்தமான், நிக்கோபார் தீவுகள் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று அதிகாலை 4.13 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 67 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருள்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசத்தை ஒட்டி சமீபகாலமாக அவ்வப்போது நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

கடைசியாக கடந்த ஜனவரி 10 மற்றும் ஜனவரி 20 ஆகிய தேதிகளில் இதேபோல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோல், இந்தோனேசியாவிலும் கடந்த ஜனவரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் அங்கு நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

அந்தமான் பகுதியில் நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்படாவிட்டாலும், கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்படுவது அப்பகுதியினரை கலக்கமடைய செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in