யானை மேல் அம்பாரியில் சாமியார்... எடைக்கு எடை துலாபாரம்... 5,555 கிலோவுக்கு ரூ.10 நாணயங்கள்!

துலாபாரத்தில் யானை
துலாபாரத்தில் யானை

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில், நேரு ஸ்டேடியத்தில், துலாபாரத்தில் யானையை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக தராசு தயார் செய்யப்பட்டது. ளி அருகே உள்ள ஒரு மடத்தில் ஹூப்பள்ளியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ஜம்போ துலாபாரத்திற்காக பிரமாண்டமான எடை தராசு நிறுவப்பட்டுள்ளது.

40 அடி நீளம், 30 அடி உயரம், 20 அடி அகலத்தில் 45 நாட்களில் ரூ.22 லட்சம் செலவில் இந்த ஜம்போ தராசு தயார் செய்யப்பட்டது. 25 டன் வரை இந்த தராசில் எடை நிறுத்த முடியும். இந்த தராசில், 60 வயதான யானை சம்பிகாவை நிறுத்தி, அதன் மீது ஹூப்பள்ளியின் ஃபகிரேஷ்வர் மடத்தைச் சேர்ர்ந்த ஃபகிரா சித்தராம சுவாமிகள் அமர்ந்திருக்க, துலாபாரத்தின் அடுத்த பக்கத்தில் ரூ.10 நாணயங்கள் எடைக்கு எடை வைக்கப்பட்டது. ஃபக்கிரேஸ்வரர் மடத்து பீடாதிபதி ஃபகிரா சித்தராம சுவாமியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த  துலாபாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

துலாபாரம்
துலாபாரம்

மொத்தம் 5,555 கிலோ எடை கொண்ட ரூ.73.40 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் வைக்கப்பட்டதும் எடை சமமானது. அதை எடுத்து துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.  இந்த நாணயங்கள் ஏற்கனவே வங்கிகள் மற்றும் பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும்.  இந்த தொகை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த  மடம் நிறுவப்பட்டதன் 60 வது ஆண்டு விழாவாகவும் இது கொண்டாடப் பட்டது. 

முன்னதாக நான்கு யானைகள், ஐந்து குதிரைகள், இரண்டு ஒட்டகங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் சமிகா யானையின் பிரம்மாண்டமான அம்பாரி உற்சவம் நடைபெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்குப் பாதிப்பா?: கனிமொழி எம்.பி பேட்டி

பகீர்... காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு: சிவசேனா தலைவர் கவலைக்கிடம்!

குரூப் 2-வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு... நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!

1,000 ரூபாய் அனுப்பினால் ஆபாச போட்டோ அனுப்புகிறேன்: பெண்ணை நம்பி பணத்தை இழந்த நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in