சிவப்பிலிருந்து காவி நிறத்துக்கு லோகோவை மாற்றிய தூர்தர்ஷன் தொலைக்காட்சி... எதிர்க்கட்சிகள் கண்டனம்!

டிடி நியூஸ் லோகோ நிற மாற்றம்
டிடி நியூஸ் லோகோ நிற மாற்றம்

தூர்தர்ஷன் இந்தி செய்தி (டிடி நியூஸ்) தொலைக்காட்சி தனது லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது. பாஜக நிறத்துக்கு அரசின் செய்தி சேனலை மாற்றியதற்கு எதிர்க்கட்சியினர், ஊடக வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான 'டிடி நியூஸ்' லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது. பிராண்டிங், செட் டிசைன், லோகோ மற்றும் பொது காட்சியியல் ஆகியவற்றில் மாற்றம் செய்துள்ளதாக 'டிடி நியூஸ்' கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளின் மூலம் அறிவித்தது.

டிடி நியூஸ் லோகோ காவி நிறத்துக்கு மாற்றம்
டிடி நியூஸ் லோகோ காவி நிறத்துக்கு மாற்றம்

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியை புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இச்சூழலில் தற்போது 'டிடி நியூஸ்' சேனலின் லோகோவையும் தனது கட்சி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜவஹர் சிர்கார், தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். டிடிநியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது.

ஜவஹர் சிர்கார்
ஜவஹர் சிர்கார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க மெரூன் / சிவப்பு நிறத்துக்குப் பதிலாக காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். முன்பு இது எஃகு சாம்பல்/நீல நிறமாக இருந்தது. ஜி-20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது.

டிடி இந்தியா
டிடி இந்தியா

இது கட்சி மற்றும் அரசின் அடையாளம் ஒன்றாக இணைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும்” என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் திவேதி கூறுகையில், “இது ஆரஞ்சு நிறம். ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு, ஜி20-க்கு முன்னதாக டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். எனவே, ஒரே குழுவிலிருந்து வரும் இரண்டு செய்தி சேனல்கள் இப்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன”என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in