கனமழையோடு சூறாவளி தாக்கும்... ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு புயல் எச்சரிக்கை!

கனமழையோடு சூறாவளி தாக்கும்... ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு புயல் எச்சரிக்கை!
Updated on
2 min read

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தைத் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்குப்பகுதியில், வளி மண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், நேற்று அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (மே 24) மாறிய பின்னர், வடகிழக்கு நகர்ந்து புயலாக வலுப்பெறும்.

இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தினைத் தாக்கும். இதனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்யும். மேலும் வங்கக் கடலில் இன்று தீவிர புயல் தாக்க வாய்ப்புள்ளது. எனவே, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.

மேலும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்யும். ஒடிசாவைத் தவிர மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை மே 23 முதல் மே 27-ம் தேதிக்குள் சூறாவளி தாக்கும். மே 28-ம் தேதி குஜராத் மற்றும் மும்பையில் கனமழை பெய்யும். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் பிற மாநிலங்களில் இன்று லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவு மற்றும் தெலுங்கானாவில் இன்று லேசானது முதல் மிதமான மழை, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in