மேற்கு வங்கத்தை குறிவைக்கும் 'ரெமல்' புயல்: 135 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுவீசும் என எச்சரிக்கை!

ரெமல் புயல் நகரும் திசை வரைபடம்
ரெமல் புயல் நகரும் திசை வரைபடம்
Updated on
2 min read

வங்கக் கடலில் உருவாகி வரும் 'ரெமல்' புயல், வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி நகர்ந்து நாளை, தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் இதன் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து கரையை கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைத்துள்ள 'ரெமல்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புயல்
வங்கக் கடலில் புயல்

'ரெமல்' புயல் நாளை (சனிக்கிழமை) மேற்கு வங்கத்தில் நடைபெறும் 6ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள 8 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

'ரெமல்' புயல் தொடர்பா இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “வரும் 26ம் தேதி காலை மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தின் கடற்கரைகளை மணிக்கு 110 - 120 கிலோ மீட்டர் வேகத்தில் 'ரெமல்' புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். இதன் தீவிரம் 27ம் தேதி காலை வரை கிட்டத்தட்ட 24 மணி நேரம் இருக்கும். அதன் பின்னர் தீவிரத்தை இழக்கும்.

பலத்த காற்று எச்சரிக்கை (கோப்புப் படம்)
பலத்த காற்று எச்சரிக்கை (கோப்புப் படம்)

'ரெமல்' புயல் காரணமாக கொல்கத்தா, ஹவுரா, நதியா, ஜார்கிராம், வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், புர்பா மேதினிப்பூர் மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கை பகுதிகளாகும். இங்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள கடலோர மாவட்டங்களுக்கு கூடுதல் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்

அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in