தடி ஏந்தி சிறுத்தையுடன் மோதும் வனவிலங்கு அதிகாரிகள்... விமர்சனத்துக்கு ஆளாகும் வைரல் வீடியோ சம்பவம்

சிறுத்தை
சிறுத்தை

தடி ஏந்தி சிறுத்தையுடன் மோதிய வனத்துறை அதிகாரிகள், அது தொடர்பான வீடியோ வைரலானதில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

சிறுத்தை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் தடிகள் ஏந்தி சமாளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தையுடன் போரிட்ட அதிகாரிக்கு ஆதரவாகவும், சிறுத்தையை மோசமான முறையில் எதிர்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

சிறுத்தையை எதிர்கொள்ளும் வனவிலங்கு அதிகாரி
சிறுத்தையை எதிர்கொள்ளும் வனவிலங்கு அதிகாரி

காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ நேற்று மாலை முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை ஒன்றினை வனவிலங்கு அதிகாரி ஒருவர் வெறுங்கையுடன் எதிர்கொள்கிறார். அந்த அதிகாரி மீது பாயும் சிறுத்தை அவரது கரத்தை கவ்வுகிறது. சிறுத்தையுடன் போராடும் அதிகாரியை மீட்க இதர வனத்துறையினர் கையில் தடிகளோடு பாய்கின்றனர்.

அந்த சிறுத்தை சூழும் சுமார் 10 நபர்கள் தடிகளாலும், கட்டைகளாலும் சிறுத்தையை தாக்கி, குத்தி முடக்குகின்றனர். சிறுத்தையால் கையில் கடிபட்ட காயத்துடன் வனவிலங்கு அதிகாரி உயிர் தப்புகிறார். 27 விநாடிகளே நீடிக்கும் இந்த வீடியோ, சினிமா காட்சிகளுக்கு நிகரான சில்லிடச் செய்யும் பரிதவிப்பை உருவாக்குகிறது. இந்த வீடியோ வெளியானது முதல் கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது.

நெட்டிசன்களில் கணிசமானோர், சிறுத்தையுடன் நேருக்கு நேர் எதிர்கொண்ட வனவிலங்கு அதிகாரியின் துணிச்சல் மற்றும் அவர் உயிர்தப்பிய விதத்தை பாராட்டி வருகின்றனர். காட்டு மிருகத்துடன் தனியாளாய் துணிந்து நின்றதையும், போராடி மீண்டதற்கும் அந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். பலர் ஒன்று சேர்ந்து தடிகளால் சிறுத்தையை தாக்குவதையும் கூட அவர்கள் நியாயப்படுத்துகின்றனர். ’மனித உயிரைக் காப்பாற்றுவதுதான் இங்கே முக்கியம். அதற்காக சிறுத்தையை தாக்கியதில் தவறில்லை. சிறுத்தை தாக்கி வனவிலங்கு அதிகாரி இறந்திருப்பின், விபரீதமாகி இருக்கும். அதற்காக அந்த சிறுத்தை அதன் பின்னர் துப்பாக்குச் சூடுக்கும் ஆளாக நேரிட்டிருக்கும்’ என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனிடையே சிறுத்தையை பொறுப்பின்றி வனவிலங்கு அதிகாரிகள் கையாண்டிருப்பதாக பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.’ வனவிலங்குத் துறையினருக்கு ஒரு சிறுத்தையை எதிர்கொள்ள இப்படித்தான் பயிற்சி கொடுத்திருக்கிறார்களா? சாமானியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வனவிலங்குடன் மோதுவதை வேண்டுமானால் வீரம் என்று சொல்லலாம். ஆனால் வனவிலங்குகளுக்கான ஒரு அதிகாரி மற்றும் அத்துறை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து, சிறுத்தையை கொடூரமாக தாக்கி இருப்பது மோசமான உதாரணம்.

வனவிலங்குகளை எதிர்கொள்வது முதல் பராமரிப்பது வரை வனவிலங்கு அதிகாரிகள் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒரு கானுயிரியை இவ்வாறு தடிகள், கட்டைகள் கொண்டு கொலைவெறித்தாக்குதல் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம். அதனை வனவிலங்குத் துறை அதிகாரிகளே மேற்கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது’ என்றும் வருத்தம் பகிர்ந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in