விபரீதம்... தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம்!

துப்பாக்கி வெடித்து சிஆர்பிஎஃப் வீரர் படுகாயம்
துப்பாக்கி வெடித்து சிஆர்பிஎஃப் வீரர் படுகாயம்

சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) வீரர், தற்செயலாக துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம், நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பஸ்தர் மக்களவைத் தொகுதியில் வருகிறது. இத்தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், உஸூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கல்காம் கிராமம் அருகே ஒரு வாக்குச் சாவடியில் இருந்து 500 மீட்டர் தொலைவில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள்
தேர்தல் பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள்

அப்போது ஒரு வீரர் வைத்திருந்த துப்பாக்கி (யுபிஜிஎல் ஷெல்) தற்செயலாக வெடித்தது. இதில் சிஆர்பிஎஃப்-ன் 196வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம், நக்ஸல் ஆதிக்கம் உள்ள பகுதி என்பதால், இங்கு தேர்தல் நடவடிக்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க அம்மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

துப்பாக்கி வெடித்து பாதுகாப்பு படைவீரர் படுகாயம்
துப்பாக்கி வெடித்து பாதுகாப்பு படைவீரர் படுகாயம்

சமீபத்தில் இங்கு நக்ஸல்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 29 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல் பாதுகாப்பு படையினர் தரப்பில் 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சூழலில் தேர்தல் நாளன்று, துப்பாக்கி வெடித்து சிஆர்பிஎஃப் வீரர் படுகாயமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in