மும்பையில் பிரதமர் மோடி ரோடு ஷோ: மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் மக்கள் திணறல்!

காட்கோபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்
காட்கோபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்

மும்பையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ காரணமாக மெட்ரோ ரயில் சேவை திடீரென 2 மணி நேரத்துக்கு ரத்து செய்யப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி திணறினர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று மாலை பிரதமர் மோடியின் பிரம்மாண்ட சாலை பேரணி (ரோடு ஷோ) நடைபெற்றது. இதில், பிரதமரைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டனர்.

முன்னதாக பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, ஜக்ருதி நகர் - காட்கோபர் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவைகளை நிறுத்தி வைக்க, அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அலுவலக வேலைகளுக்கு சென்று திரும்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு இரவு 7:46 மணிக்கு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. ரயில் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டதால் காட்கோபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் போட்டி போட்டு ரயிலில் ஏற முயன்றதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. மக்கள் நெரிசலில் திணறுவது அங்குள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பான வீடியோக்களை மும்பை வாசிகள், சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “தினசரி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர்நாடியாக விளங்கும் மும்பை மெட்ரோ, பிரதமரின் வருகைக்காக அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளால் சீர்குலைந்தது மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வருகைக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது, மும்பையில் வேலைக்கு சென்றும் திரும்பிய பல்லாயிரக்கணக்கான மக்களை அவதிக்குள்ளாக்கியது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதி உள்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி நேற்று அங்கு வாகனப் பேரணி, பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in