மக்களே உஷார்... 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மழை
மழை

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளுர், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், திருவாரூர், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்... பத்திரமா இருங்க!

உஷார்... இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!

புட்லூர் ரயில் நிலையத்தில் பகீர்! மனைவி கண்முன்னே கணவன் கழுத்தறுத்துக் கொலை

அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; அலறிய நோயாளிகள்!

கொட்டும் மழையில் ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in