சம்பாய் சோரன் முதல்வராக நீடிப்பார்... ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி
நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையாயல் கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஜேஎம்எம் மூத்த தலைவர் சம்பாய் சோரன் பதவியேற்றார்.

இதையடுத்து இன்று ஜார்க்கண்ட் சட்டப் பேரவையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக குதிரை பேரத்தைத் தவிர்ப்பதற்காக, ஜேஎம்எம் எம்எல்ஏக்கள், ஹைதராபாத்தில் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர், நேற்று இரவு அவர்கள் மீண்டும் ராஞ்சிக்கு திரும்பினர். இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், நீதிமன்ற அனுமதியின்பேரில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டார்.

சட்டப் பேரவையில் பேசிய சம்பாய் சோரன், "நாடு முழுவதும் ஜனநாயகத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஹேமந்த் சோரனுக்கு எப்படி அநீதி இழைக்கப்படுகிறது என்பதை இன்று ஒட்டுமொத்த நாடும் பார்க்கிறது. நீங்கள் எந்த கிராமத்துக்கு சென்றாலும், ஹேமந்த் சோரனின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டிலும் காணலாம். நான் ஹேமந்த் சோரனின் பார்ட்-2 என பெருமையுடன் சொல்கிறேன்" என்றார்.

சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் சம்பாய் சோரன்
சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் சம்பாய் சோரன்

இதேபோல் அவையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மத்திய பாஜக அரசை விமர்சித்தனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 வாக்குகள் கிடைத்தன. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் 29 பேர் சம்பய் சோரன் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

சம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 47 பேரில் ஆங்கிலோ-இந்திய சட்டப்பேரவை நியமன உறுப்பினரான க்ளென் ஜோசப் கால்ஸ்டானும் ஒருவராவார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in