அசாதாரண சூழல்... ஜார்க்கண்ட் முதல்வரானார் சம்பாய் சோரன்!

சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்பு...
சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்பு...

ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் இன்று ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜேஎம்எம்) தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் ரூ.600 கோடி நில மோசடி தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த 31-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

சம்பாய் சோரன்.
சம்பாய் சோரன்.

முன்னதாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தனக்குப் பிறகு முதல்வர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சம்பாய் சோரனை தேர்வு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடித்தார்.

ஹேமந்த் சோரன் கைதைத் தொடர்ந்து ஜார்க்கண்டில் கடந்த இரண்டு நாள்களாக அரசியல் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பாய் சோரன், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை வெளி மாநில ரிசார்ட்டுகளில் தங்க வைக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக, அம்மாநிலத்தில் மோசமான வானிலை காரணமாக ராஞ்சியில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பாய் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர்.
சம்பாய் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னர்.

இச்சூழ்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 7-வது முதல்வராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் உள்ள ராஜ் பவனின் தர்பார் ஹாலில் இன்று மதியம் 12.15 மணியளவில் சம்பாய் சோரன் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நேற்று இரவு, ஜேஎம்எம் தலைவர் சம்பாய் சோரனை, ஆட்சி அமைக்க, அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று அவர் முதல்வராக பதவி ஏற்றார். சம்பாய் சோரன் அடுத்த 10 நாள்களுக்குள் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் தனக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக சம்பாய் சோரன் ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை... சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனையால் பரபரப்பு!

'#தலைவர் விஜய்'... ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர்... 10 நாட்களில் 25,000,00 பக்தர்கள் தரிசனம்! 11 கோடி காணிக்கை!

பெரும் பதற்றம்... துணை ராணுவம் குவிப்பு... டெல்லியில் ஆர்ப்பாட்டம்... இரண்டு மாநில முதல்வர்கள் பங்கேற்பு!

மகளிர்க்கு இலவச பேருந்து பயணம்... எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கொளுத்தி போராட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in