கோடிகளைக் குவிக்கும் அயோத்தி ராமர்... 10 நாட்களில் 25,000,00 பக்தர்கள் தரிசனம்! 11 கோடி காணிக்கை!

அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில்
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 10 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும்,  11 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்...
தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்...

உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த மாதம் 22ம் தேதி  குழந்தை இராமர் சிலையு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 23ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அன்றிலிருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து குழந்தை ராமரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து குழந்தை ராமரை தரிசித்துச் சென்றிருக்கிறார்கள். 

இது குறித்து ராமர் கோயில் அறக்கட்டளை பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில்,  "ராமர் கோயிலில் கடந்த 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கை ரூ.8 கோடி, காசோலை மற்றும் ஆன்லைன் காணிக்கை ரூ.3.50 கோடி என மொத்தம் ரூ.11 கோடிக்கு மேல் காணிக்கை வசூலாகி உள்ளது" என்றார்.

அயோத்திக்கு வரும் பக்தர்களின் கூட்டம் சற்றும் குறையாமல் இருக்கும் நிலையில்,  பிப்ரவரி மாத இறுதிக்குள் ஒரு கோடி பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in