
கணினி வகைகள் இறக்குமதிக்கு உரிமம் பெற வேண்டும் என்று அறிவித்திருந்த மத்திய அரசு தற்போது உரிமம் தேவையில்லை. ஆனால் கண்காணிப்போம் என தெரிவித்துள்ளது.
மடிக்கணினி, கணினி, கையடக்க கணினி, மைக்ரோ கணினி, டேட்டா ப்ராசசிங் எந்திரங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இறக்குமதிக்கு நவம்பர் 1ம் தேதி முதல் உரிமம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
அதற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தியது. இறக்குமதியை கண்காணிக்க மட்டுமே செய்வோம் என்று கூறியது. இந்நிலையில் மடிக்கணினி, கணினி உள்ளிட்ட சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரி மத்திய அரசுக்கு 111 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றின் 110 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. ஆப்பிள், டெல், லெனோவா, எச்பி, இந்தியா சேல்ஸ், ஐ.பி.எம் இந்தியா, சாம்சங் , ஷாவ்மி டெக்னாலஜி, சிஸ்கோ, மைக்ரோசாப்ட், சீமென்ஸ், ஆரக்கல் உள்ளிட்ட டெக்னாலஜி, நிறுவனங்களுக்கு மடிக்கணினி இறக்குமதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்த அனுமதி செல்லும்.
இதையும் வாசிக்கலாமே...
நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!
9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!