கேரளாவில் இன்னும் கணக்கைத் தொடங்கல; திணறும் மோடி... தவிக்கும் அமித்ஷா!

கொச்சியில் மோடி ரோடு ஷோ
கொச்சியில் மோடி ரோடு ஷோ

ஒரு இடத்திலேயும் தாமரை மலரவில்லை என்பது பாஜகவின் தேசிய தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நீடித்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ பிரச்சார வியூகம், அமித்ஷாவின் தொடர் பயணங்கள், ஜே.பி.நட்டாவின் அரசியல் வியூகங்கள், அமலாக்கத்துறையின் அழுத்தம், மத்திய அரசின் விடுவிக்கப்பட்ட வேண்டிய மாநில நிதி நிறுத்தம் என எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் கடவுளின் தேசத்தில் கால் பதிக்க முடியாமல் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து போராடி வருகிறது பாஜக.

நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கியிருக்கிறது. வெளிநாடுகள் சுற்றுப்பயணத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. பிரச்சாரம் செய்ய நேரமில்லாத இடங்களிலும் கூட ‘ரோடு ஷோ’ மூலமாக கொஞ்சமும் சளைக்காமல் தனது கைகளை அசைத்தப்படியே பொதுமக்களிடையே புன்முறுவல் காட்டிச் செல்கிறார். இத்தனைக்கும் பிற மாநிலங்களில் வண்டியில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி, கேரள மாநிலத்தில், கொச்சியில் நடந்தே சென்று மக்களை சந்தித்தார்.

இத்தனை மெனக்கெட்டு பிரச்சாரம் செய்தும், தென்னிந்தியாவில் தடம் பதிப்பது பாஜகவுக்கு கனவாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகமும், கேரளமும் பாஜகவை அத்தனை எளிதில் வேரூன்ற விடாமலே இருப்பது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

கேரளத்தில் 2014 மற்றும் 2019 என கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செலவு அறிக்கை மற்றும் ரிட்டர்ன்களின் படி பாஜக ரூ. 40 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் அளித்துள்ள நிலையில், இந்த தேர்தல்களில் கேரளத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்க அடிக்க அம்மியும் நகரும், உளி கொண்டு மலையைக் குடையும் கதையாக பாஜகவின் வாக்கு சதவிகிதம் சுமார் 40 கோடி செலவழித்த பின்னர் 10.45 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக அதிகரித்திருப்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

2014 லோக்சபா தேர்தல் காலத்தில் கோடிகளில் செலவழித்தும் ஒரு இடம் கூட வெல்ல முடியாத சூழலில், கடந்த 2019ல் பாஜக கேரளத்தில் வெல்லும் முனைப்புடன் தனது செலவினத்தை ரூ.15 கோடியிலிருந்து அதிரடியாக ரூ.25 கோடியாக உயர்த்தியது. இருந்தாலும், 2019 தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

இத்தனைக்கும் 2019 தேர்தல் காலங்களில் சபரிமலை விவகாரத்தை மையமாக வைத்து பாஜக, கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தொடர்ந்து போஸ்டர்கள், பேனர்கள், மெகா சைஸில் விளம்பர பலகைகள் என ரூ.83.5 லட்சம் செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்குப்பதிவு சமயங்களில் பூத் செலவுகளுக்கும், தேர்தல் அலுவலகங்களுக்கும் திருவனந்தபுரத்தில் மட்டுமே ரூ.93.5 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், பத்தனம்திட்டாவில் ரூ.79 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

 

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in