பரபரப்பு... கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சிக்கியது எப்படி?

தேவராஜ் கவுடா
தேவராஜ் கவுடா

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு பரபரப்புக்கு மத்தியில் வழக்கறிஞரான பாஜக தலைவர் தேவராஜ் கவுடா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ரேவண்ணாவின் மகன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவராஜ் கவுடா
தேவராஜ் கவுடா

இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகளை அம்பலப்படுத்திய பாஜக தலைவர் தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹாசன் தொகுதியின் ஹோலேநரசிபுரா டவுன் காவல் நிலையத்தில் தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதி என்ற பெண் தன்னை தேவராஜ் கவுடா மற்றும் பலர் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறியதை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 1-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதனையடுத்து தேவராஜ் கவுடாவின் மொபைலை ட்ராப் செய்து அவரை கைது செய்ய போலீஸார் முயன்றனர். ஆனால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடிவு செய்தார். அதற்கு முன் தன் செல்போனை ஆன் செய்து தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ நேற்று இரவு 8:50 மணிக்கு வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பப்பட்டது. தேவராஜ் கவுடாவின் மொபைல் போன் ஆன் செய்யப்பட்டதை அறிந்த போலீஸார், நெட்வொர்க்கின் அடிப்படையில் ஹிரியூர் அருகே தேவராஜ் கவுடாவை கைது செய்தனர்.

எல்.ஆர்.சிவராம கவுடா, தேவராஜ் கவுடா.
எல்.ஆர்.சிவராம கவுடா, தேவராஜ் கவுடா.

ஹாசன் எம்-பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கறிஞர் தேவராஜ் கவுடா ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தார். " கர்நாடகா பென் டிரைவ் வழக்கின் மூளையாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, டி.கே. சிவக்குமார் தான். பென் டிரைவ் பகிர்வு என்பது சித்தராமையா அரசின் கேம் ஃபிளான் தான். உண்மையான குற்றவாளிகளை காங்கிரஸ் அரசு மறைத்துள்ளது. சமரமாய் போகிறவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்துள்ளனர். இதற்கு முன்னாள் எம்.பி எல்.ஆர்.சிவராம கவுடா மத்தியஸ்தராக அனுப்பப்பட்டார்" என்று தேவராஜ் கவுடா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிவராம கவுடாவுடன் பேசிய இரண்டு ஆடியோ கிளிப்புகள் மற்றும் ஹனிட்ராப் தொடர்பாக அந்த பெண் தனது கணவருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிவராம கவுடாவுடன் பேசிய ஆடியோவை டி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in