அருணாச்சல் சட்டமன்றத் தேர்தல்... முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

பாஜக
பாஜக

அருணாச்சல பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை இன்று அறிவித்தது.

அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் வரும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் முதல் கட்சியாக பாஜக பேரவைத் தேர்தலுக்கான 60 தொகுதிகளின் வேட்பாளர்களையும் இன்றும் அறிவித்துள்ளது.

பாஜக மத்திய தேர்தல் குழு சமீபத்தில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஒப்புதல் அளித்ததாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு
பிரதமர் மோடியுடன் அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு

வேட்பாளர் பட்டியல் வெளியீட்டின்படி, அம்மாநில முதல்வர் பெமா காண்டு, மீண்டும் முக்தோ தொகுதியில் போட்டியிடுகிறார். அருணாச்சல் பாஜக தலைவர் பியூராம் வாஹ்கே, பாக்கே-கெசாங் (எஸ்டி) தொகுதியிலும், துணை முதல்வர் சோனா மெய்ன், சவுகான் (எஸ்டி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019ல் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 7 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி ஓரிடத்திலும், சுயேச்சைகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!

மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

சச்சினின் 30 ஆண்டுகால சாதனை முறியடிப்பு... இளம் வீரர் முஷீர் கான் அபாரம்!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பரபரப்பு... பெல்லாரியில் சிக்கியது குற்றவாளியா?

திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி... வார்டு புறக்கணிக்கப்படுவதாக புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in