கேரளாவில் அண்ணாமலையை வரவேற்று வைத்த பேனர்கள் அகற்றம்...போலீஸாருடன் பாஜக வேட்பாளர் வாக்குவாதம்!

பாஜக பேனர்கள் அகற்றம்.
பாஜக பேனர்கள் அகற்றம்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்று வைத்த பேனர்களை போலீஸார் அகற்றியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 20 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூடட்டணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது. இதன் வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) நிறைவடைகிறது.

அண்ணாமலை பிரச்சாரம்
அண்ணாமலை பிரச்சாரம்

கேரளாவில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டார். திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரை ஆதரித்து அண்ணாமலை நேற்று வாக்குசேகரித்தார். குன்னத்துகால், பாறசாலை, அமரவிளை, உதயஙகுளம் கரை போன்ற பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில், வயநாடு பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வதாக பேனர்கள் அமைக்கப்பட்டன. இந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தொகுதியில் போட்டி வலுவாகியுள்ளது. இதனால் வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.

பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரன்
பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரன்

இதனால் அண்ணாமலையை வரவேற்று மானந்தவாடியில் பாஜகவினர் வைத்திருந்த பேனர்களை போலீஸார் இன்று அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக வேட்பாளர் கே.சுரேந்தினுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸார் வலுக்கட்டாயமாக அகற்றிய பேனர்களை அவர்களைக் கொண்டே பாஜவினர் மீண்டும் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in