‘தனி மாநிலம் வேண்டும்’ பந்த் நடத்தி பரபரப்பு கிளப்பும் கிழக்கு நாகாலாந்து

பந்த்
பந்த்
Updated on
2 min read

நாகாலாந்து மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்கள் ஒன்றிணைந்து இரண்டாம் நாள் பந்த் போராட்டத்தை இன்று செயல்படுத்துகின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று நாகாலாந்து. இதன் கிழக்கு பிராந்திய மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக சென்று சேர்வதில்லை என்றும், மேற்குடன் ஒப்பிடுகையில் பின்தங்கி இருப்பதாகவும் பல ஆண்டுகளாக குறைபட்டு வருகின்றனர்.

கிழக்கு நாகாலாந்து பந்த்
கிழக்கு நாகாலாந்து பந்த்

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்ற குடையின் கீழ், 6 மாவட்டங்களின் பழங்குடி அமைப்புகள் மற்றும் முன்னணி இயக்கங்கள் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

கிழக்கு நாகாலாந்தின் மோன், துயென்சாங், லாங்லெங், கிஃபிர், நோக்லக் மற்றும் ஷமடோர் மாவட்டங்களை சேர்ந்தோர் பல கட்ட போராட்டங்களை இதற்காக நடத்தி வருகின்றனர். அவற்றில் ஒன்றாக நேற்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான கடையடைப்பு அங்கே செயல்படுத்தப்பட்டது.

கிழக்கு நாகாலாந்தின் மாவட்டங்கள் நெடுக கடையடைப்பு போராட்டம் முழு வெற்றியடைந்ததாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாள் பந்த் இன்றைய தினமும்(மார்ச்.9) தொடரும் என கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு அறிவித்திருந்தது. நேற்றைய கடையடைப்புக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மத்தியில் முழு ஆதரவு இருந்தது. அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு தலைமையிலான போராட்டங்களில் ஒன்று
கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு தலைமையிலான போராட்டங்களில் ஒன்று

கிழக்கு நாகாலாந்தின் 6 மாவட்டங்களில் பிரதானமாக வசிக்கும் சாங், கியாம்னியுங்கன், கொன்யாக், போம், சாங்டம், திகிர் மற்றும் யிம்கியுங் ஆகிய பழங்குடியினர் இந்த கடையடைப்பு போராட்டத்தை வீதிகளில் இறங்கி செயல்படுத்தினர். முன்னதாக, கிழக்கு நாகாலாந்தில் மக்களவை தேர்தலுக்கு எந்த அரசியல் கட்சியையும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, மார்ச் 5 அன்று இந்த அமைப்புகள் சார்பில் பொது அவசர நிலையை கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு அறிவித்திருந்தது. இதன் மூலம் அரசியல் கட்சிகள் கிழக்கு நாகாலாந்து மாவட்டங்களில் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நேருவின் சாதனையை சமன் செய்வாரா... நீண்டகால பிரதமர்கள் வரிசையில் முன்னேறும் மோடி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அஜித்... 'தல' ரசிகர்கள் உற்சாகம்!

‘கருப்பர் தேசம்’ யூடியூப் சேனலுக்கு 1 கோடியே 1,000 ரூபாய் அபராதம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

படிக்கும் வயதில் காதல்... பாதியில் முடிந்த வாழ்க்கை... 10-ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை!

பிரதமர் மோடி யானை சவாரி... அசாம் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in