சர்ச்சைக்குரிய கமல் மௌலா மசூதியில் ஆய்வு... கூடுதல் அவகாசம் கோரியது தொல்லியல் துறை

போஜ்ஷாலா வளாகம்
போஜ்ஷாலா வளாகம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்து - முஸ்லீம் என இருதரப்பினரும் உரிமை கொண்டாடும் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில், தங்கள் ஆய்வினை மேலும் தொடர கூடுதல் அவகாசத்தை மத்திய தொல்லியல் துறை கோருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது போஜ்ஷாலா வளாகம். இதனை வாக்தேவி என்று உள்ளூர் மக்களால் வணங்கப்படும் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதே போன்று இங்கே முஸ்லிம்களுக்கான 11-ம் நூற்றாண்டு பின்னணியிலான கமல் மௌலா மசூதி அமைந்துள்ளது.

போஜ்ஷாலா வளாகத்தின் இந்துக்கள் பகுதி
போஜ்ஷாலா வளாகத்தின் இந்துக்கள் பகுதி

இருதரப்பினரும் இந்த வளாகத்தை தங்கள் வழிபாட்டுக்கான தலமாக உரிமை கொண்டாடியதில் சர்ச்சை வெடித்தது. இந்துக்கள் சார்பில் ’நீதிக்கான இந்து முன்னணி’ என்ற அமைப்பு நீதிமன்றத்தை நாடியது. இது மே, 2022-ல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தின் தன்மையை தீர்மானிக்க ஓர் அறிவியல் ஆய்வைக் கோரியது. அதன்படியே தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு அனுமதியும் கிடைத்தது. மார்ச் 22 முதல் தொல்லியல் துறை ஆய்வு அங்கே தொடங்கியது.

இதனை எதிர்த்த இஸ்லாமியர் தரப்பினர் ‘தொல்லியல் துறையின் ஆய்வு வழிபாட்டுத் தலத்திற்குச் சேதம் விளைவிப்பதோடு, சமூகங்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் ஏப்ரல் 1 அன்று நடபெற்ற இந்த வழக்கு விசாரணையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது.

கடந்தாண்டு ஏப்ரல் 7 அன்று தொல்லியல் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, போஜ்ஷாலா வளாகத்தில் இந்துக்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை செவ்வாய்க் கிழமைகளில் பிரார்த்தனை செய்யலாம்; அதே போன்று முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை நமாஸ் நடைமுறைகளை மதியம் 1 முதல் 3 மணி வரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வாராணசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி
வாராணசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி

தற்போது போஜ்ஷாலா வளாகத்தில் இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வரும் அறிவியல்பூர்வமான ஆய்வுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தங்கள் ஆய்வை முழுமை செய்ய மேலும் 8 வாரங்கள் கோரி தொல்லியல் துறை கோரிக்கை சமர்ப்பித்துள்ளது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட தொல்லியல் துறையின் விண்ணப்பத்தில், ’சர்ச்சைக்குரிய வளாகத்தின் கட்டமைப்புகளின் தன்மையைப் புரிந்து கொள்ள’ கூடுதல் அவகாசம் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ​​ஏப்ரல் 29 அன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

அயோத்தியை தொடர்ந்து வாராணசி, மதுரா ஆகிய சர்ச்சை வளாகங்களின் வரிசையில் போஜ்ஷாலாவும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in