இன்சுலின் பிரச்சினையில் சிறை நிர்வாகம் தவறான தகவலை வெளியிடுகிறது... கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இன்சுலின் பிரச்சினையில் சிறை நிர்வாகம் தான் கூறாத தகவலை வெளியிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் கலால் கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலின் கீழ், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திகார் சிறை
திகார் சிறை

இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கவும், அவர் தனது மருத்துவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திப்பதற்கும் சிறை நிர்வாகம் மறுத்துள்ளதாகவும், இதன் மூலம் சிறைக்குள் வைத்து கேஜ்ரிவாலை மெதுவாக கொல்லும் சதி நடந்து வருவதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், திகார் சிறை கண்காணிப்பாளருக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் எழுதிய கடிதம் என ஆம் ஆத்மி கட்சி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், “நான் தினமும் இன்சுலின் கேட்கிறேன். நான் குளுக்கோஸ் மீட்டர் அளவீடுகளைக் காட்டினேன். சர்க்கரை ஒரு நாளைக்கு 3 முறை மிக அதிகமாக செல்கிறது என்று சொன்னேன். சர்க்கரை அளவு 250 முதல் 320 வரை செல்கிறது. உணவுக்கு முந்தைய எனது சர்க்கரை அளவு ஒவ்வொரு நாளும் 160-200 வரம்பில் இருப்பதை நான் அவர்களுக்குக் காட்டினேன்.

இன்சுலின்
இன்சுலின்

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நான் இன்சுலின் கேட்டேன். இன்சுலின் பிரச்சினையை நான் ஒருபோதும் எழுப்பவில்லை என்று நீங்கள் (சிறை நிர்வாகம்) எப்படி ஒரு அறிக்கையை வெளியிட முடியும்?”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கேஜ்ரிவால் தினமும் இன்சுலின் கேட்டுள்ளதும், ஆனால், அவர் இன்சுலின் கேட்கவில்லை என சிறை நிர்வாகம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கேஜ்ரிவாலின் இன்சுலின் விவகாரம் தற்போது டெல்லி அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in