அதிர்ச்சி... பாகிஸ்தானுக்காக இந்திய ராணுவத்தை வேவு பார்த்த இளைஞர் கைது: குஜராத்தில் ஏடிஎஸ் அதிரடி!

குஜராத்தில் கைது செய்யப்பட்ட முகமது சக்லைன்
குஜராத்தில் கைது செய்யப்பட்ட முகமது சக்லைன்

பாகிஸ்தானுக்காக இந்திய ராணுவவீரர்களை உளவு பார்த்தவர் குஜராத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வசிக்கும் முகமது சக்லைன். இவர் பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்திய செல்போன் சிம்காட்டை வாங்கியுள்ளார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக உளவு பார்க்க இந்த எண்ணை சக்லைன் பயன்படுத்தி வந்தார். இந்திய ராணுவவீரர்களுக்கு எதிரான தகவல்களை இந்த சிம்கார்ட் மூலம் பாகிஸ்தானுக்கு தெரிவித்து வந்துள்ளார். அவரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு(ஏடிஎஸ்) நேற்று இரவு கைது செய்துள்ளது.

இந்திய ராணுவவீரர்கள்
இந்திய ராணுவவீரர்கள்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து இந்திய பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்ட காரணத்திற்காக முகமது சக்லைன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏடிஎஸ் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உத்தரவின் பேரில், அவர் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் ஏடிஎஸ் ராணுவ உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், தாராபூரைச் சேர்ந்த லப் சங்கர் மகேஸ்வரி(53) கைது செய்யப்பட்டார். அவர் தனது மனைவியின் கர்ப்ப சிகிச்சைக்காக குஜராத் வந்து இந்தியரானார். ஆனால், பின்னர் உளவு பார்தததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

லப்சங்கர் மகேஸ்வரி
லப்சங்கர் மகேஸ்வரி

இதன்பின் இந்திய குடியுரிமை பெற்ற முன்னாள் பாகிஸ்தான் குடிமகனான லப்சங்கர் மகேஸ்வரி, முகமது சக்லைனுக்கு சிம் கார்டை வழங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து லப்சங்கர் கைது செய்யப்பட்ட அக்டோபர் 2023-ம் ஆண்டுக்குப் பிறகு முகமது சக்லைன் தலைமறைவானார். தற்போது அவர் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in