எத்திலீன் ஆக்சைடு சேர்க்கையால் பாதகமில்லை... இந்தியாவின் சர்ச்சை மசாலாக்களுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி

தடைக்கு ஆளான எவரெஸ்ட் - எம்டிஹெச் மசாலாக்கள்
தடைக்கு ஆளான எவரெஸ்ட் - எம்டிஹெச் மசாலாக்கள்

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் தடைசெய்யப்பட்ட மசாலாக்களுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியுள்ளது. அனுமதிக்கப்பட்ட எத்திலீன் ஆக்சைடு மசாலா பொருட்களில் சேர்ந்திருப்பதால் பாதகமில்லை என்றும் விளக்கம் தந்துள்ளது.

அண்மையில் இந்தியாவின் பிரபல எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளில் குறிப்பிட்ட மசாலா ரகங்கள் இந்தியாவுக்கு வெளியே சர்ச்சைக்கு ஆளாயின. அது இந்தியாவிலும் இந்திய மசாலாப் பொருட்களின் விற்பனையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

எவரெஸ்ட் மீன் மசாலா
எவரெஸ்ட் மீன் மசாலா

குறிப்பிட்ட மசாலாக்களில் கண்டறியப்பட்ட எத்திலீன் ஆக்சைடு சேர்மானம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எனவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் மேற்படி மசாலாக்கள் கடைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டன. மேலும் அவற்றின் விற்பனைக்கும் அந்த நாடுகள் தடை விதித்தன.

ஆனால் அண்மை நிலவரங்களின்படி, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆகிய இரண்டும் எத்திலீன் ஆக்சைடு பாவிக்கப்பட்ட மசாலாப் பொருட்களை உட்கொள்வது பாதுகாப்பானது என்று முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்க மசாலா வர்த்தக சங்கம் இன்றைய தினம் உறுதி செய்துள்ளது.

இந்திய மசாலா பிராண்டுகளான எம்.டி.ஹெச் மற்றும் எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் தயாரிக்கும் பல மசாலா வகைகளுக்கு எதிராக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நடவடிக்கை எடுத்த சூழலில் இந்த அறிக்கை இந்திய மசாலாக்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.

எம்டிஹெச் மசாலா
எம்டிஹெச் மசாலா

கடந்த மாதம் எம்டிஹெச் நிறுவனத்தின் தயாரிப்புகளான மெட்ராஸ் கறி தூள், சாம்பார் மசாலா தூள் மற்றும் கறி பொடி மசாலா தூள் தயாரிக்கப்பட்ட என 3 மசாலா கலவைகள், மற்றும் மீன் குழம்புக்கான எவரெஸ்ட் மசாலா கலவை ஆகியவற்றின் விற்பனை சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் நிறுத்தப்பட்டது.

இந்த மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான “எத்திலீன் ஆக்சைடு” ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளுக்கு மேல் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அவர்கள் அறிவித்ததே இதற்கு காரணம். இவற்றுக்கு இடையே அமெரிக்காவின் அறிவிப்பால் இந்திய மசாலா நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in