இந்தியாவின் அடுத்த பாய்ச்சல்... புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை வெற்றி!

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

டிஆர்டிஓ வெளியிட்ட தகவல்
டிஆர்டிஓ வெளியிட்ட தகவல்

நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி-பிரைமை இந்தியா வெற்றிகரமாக நேற்றிரவு 7 மணிக்கு சோதனை செய்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பல சென்சார்களால் பெறப்பட்ட தரவுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டபடி, சோதனை அதன் நம்பகமான செயல்திறனை சரிபார்க்கும் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளது.

அணு ஆயுத புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை
அணு ஆயுத புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை

ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டிஆர்டிஓ) இணைந்து வியூக படை கட்டளை (எஸ்எப்சி) இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையை, பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், எஸ்எப்சி தலைவர், டிஆர்டிஓ, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பார்வையிட்டனர். புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை அக்னி பிரைம் சோதனை வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது பாதுகாப்பு துறையின் ஆயுதப் படை திறமைக்கு வலிமை சேர்க்கும் என கூறியுள்ளார்.

இதேபோல், எஸ்எப்சி, டிஆர்டிஓ-வின் முயற்சிக்கு பாதுகாப்புத் தளபதி ஜெனரல் சவுகான், டிஆர்டிஓ தலைவர் சமீர் வி காமத் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in