
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இன்று(அக்.26) காலை தொடங்கி நடைபெற்று வரும் என்கவுன்டரில், மதிய நிலவரப்படி 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் அரசியல் ஸ்ரமின்மை, பொருளாதார தேக்கம் ஆகியவை காரணமாக பயங்கரவாதக் குழுக்களின் அட்டகாசம் அங்கே அதிகரித்துள்ளது. ஆப்கன் தாலிபன்கள் ஆதரவுடன் உள்நாட்டிலும் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இவற்றுக்கு அப்பால், எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாத செயல்களை திட்டமிடுவதும் புதிய போக்கில் வேகமெடுத்துள்ளது.
பயங்கரவாத குழுக்களின் இந்த புதிய போக்கினை கட்டுப்படுத்த, இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை, உளவு அமைப்புகள் ஆகியவை கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பகிர்ந்துகொண்டு, ஒருங்கிணைந்து செயல்படுவதுடன் அந்த கூட்டணியில் பொதுமக்களையும் சேர்த்து வருகின்றன.
எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் முதலில் அடைக்கலமாகி, பின்னர் தங்களுக்கான வலைப்பின்னல் அழைப்பின்படி வெளிப்படுவார்கள். ஜம்மு காஷ்மீர் போலீஸாரின் புதிய ஏற்பாட்டின்படி, எல்லையோர கிராம மக்களுக்கு தற்காப்புகான ஆயுதங்கள் வழங்கப்பட்டு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக, பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் சந்திப்புகள் தொடர்பாக தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை போலீஸார் மற்றும் ராணுவத்தினரிடம் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வகையில் இன்று காலை, எல்லை தாண்டிய ஊடுருவல் தொடர்பான ரகசியத் தகவல் ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்கு கிடைத்தது. இதன் அடிப்படையில் குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டாரில், ஊடுருவல்காரர்களை ராணுவம் மற்றும் போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் மேற்கொண்ட இந்த பயங்கரவாதிகள், எல்லையோர பதுங்குமிடங்களில் இருந்தபடி எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றனர். காலை முதல் நடந்து வரும் இந்த தாக்குதலில், மதியம் வரை 2 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இருதரப்பு இடையிலான துப்பாக்கிச்சூடு அங்கே தொடர்ந்து வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!
நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!
நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!