கர்நாடகாவில் 13 தொகுதிகளுக்கு 13 அமைச்சர்கள் பொறுப்பு... குறிவைத்து வேலை செய்யும் காங்கிரஸ்!

கார்கே, சித்தராமையா, சிவக்குமார்
கார்கே, சித்தராமையா, சிவக்குமார்

கர்நாடகாவில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 13 தொகுதிகளுக்கு 13 அமைச்சர்களை பொறுப்பாளர்களாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நியமித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

கேரளா, கர்நாடகா, அசாம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற்றது. இதில் கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக மே 7-ம் தேதி 14 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. அதற்காக 13 தொகுதிகளுக்கு 13 அமைச்சர்களைத் தொகுதி பொறுப்பாளர்களாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று நியமித்துள்ளார்.

ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார்
ராகுலுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார்

அதன்படி தாவண்கெரேவிற்கு டாக்டர் ஜி.பரமேஷ்வர், தார்வாட்டிற்கு தினேஷ் குண்டுராவ், உத்தர கன்னடத்திற்கு கே.ஜே. ஜார்ஜ், சிக்கொடிக்கு கே.எச்.முனியப்பா, ஹாவேரிக்கு கிருஷ்ண பைரகவுடா, பெல்லாரிக்கு ராமலிங்கரெட்டி, பெலகாவிக்கு பைரதி சுரேஷ், கொப்பலுக்கு எம்.சி. சுதாகர், ராய்ச்சூருக்கு கே.என்.ராஜண்ணா, பிதாருக்கு கே.வெங்கடேஷ், ஷிவ்மோகாவிற்கு என்.செலுவராயசுவாமி, விஜயபுராவிற்கு மகாதேவப்பா, பாகல்கோடடிற்கு டி. சுதாகர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா வட கர்நாடகாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ​​கலபுர்கியைத் தொடர்ந்து தேரடாலா மற்றும் ரபகவி பனஹட்டிக்கு சென்று சித்தராமையா இன்று பிரசாரம் செய்கிறார்.இதையடுத்து பாகல்கோட்டில் சம்யுக்தா பாட்டீலுக்கு ஆதரவாக முதலமைச்சர் சித்தராமையா பிரச்சாரம் செய்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in