தங்கம்
தங்கம்

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!

கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,285 ரூபாய்க்கும், ஒரு சவரன் 42,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,305 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 42,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 5,775 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 46,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.74.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 74,500 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதிரடியாக சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in