
இஸ்ரேல் போர் எதிரொலி காரணமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது நகைப்பிரியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு 160 உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் 520 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35,370க்கும், சவரன் 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், காலையில் வெள்ளி விலை கிராமுக்கு 1.50 உயர்ந்த நிலையில், தற்போது ஒரு கிராம் 50 காசுகள் உயர்ந்து 75ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என கூறப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!