நகை விலை விவரம்... தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

தங்கம் விலை
தங்கம் விலை

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

தங்க நகைகள்
தங்க நகைகள்

சர்வதேச பங்குச்சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ஆபரணத்தங்கத்தின் விலையிலும் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது ஆறுதலை அளித்துள்ளது.

தங்க  நகைகள்
தங்க நகைகள்

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து 46,960 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து 5,870 ரூபாயாக விற்பனையாகிறது.

18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் 4,808 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் 38,464 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 6,340 ரூபாயாக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் 50,720 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, கிராம் வெள்ளி 77.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பிப்.12-ம் தேதி பட்ஜெட் கூட்டம்... ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

நடிகர் விஜய் தொடங்கிய கட்சியால் திமுகவுக்குப் பாதிப்பா?: கனிமொழி எம்.பி பேட்டி

பகீர்... காவல் நிலையத்தில் பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு: சிவசேனா தலைவர் கவலைக்கிடம்!

குரூப் 2-வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு... நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு!

1,000 ரூபாய் அனுப்பினால் ஆபாச போட்டோ அனுப்புகிறேன்: பெண்ணை நம்பி பணத்தை இழந்த நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in