நாளை (அக்டோபர் 1) முதல் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற பிறப்புச் சான்றிதழை ஆவணமான பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், திருமண பதிவு, கல்வி அமைப்புகளில் சேரவும் பிறப்புச் சான்றிதழை இனி அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், நாளை (அக்.1) முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனத்தில் சேருதல், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இனி நாடு முழுவதும், ஒரு நபரின், பிறந்த தேதி, பிறந்த இடத்தை நிரூபிக்க ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழை பயன்படுத்தலாம்.
இதையும் வாசிக்கலாமே...
மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!
நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!