சித்ரா பவுர்ணமியை சிறப்பிக்க காத்திருக்கும் பிங்க் மூன்... இன்றும், நாளையும் நன்றாக தரிசிக்கலாம்

சித்ரா பவுர்ணமியை சிறப்பிக்க காத்திருக்கும் பிங்க் மூன்... இன்றும், நாளையும் நன்றாக தரிசிக்கலாம்
பிங்க் மூன்

சித்ரா பவுர்ணமிக்கான கொண்டாட்டத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்க காத்திருக்கிறது இன்றைய தினத்தின் ‘பிங்க்’ நிலா தரிசனம்.

பவுர்ணமிகளில் சிறப்பானது சித்திரையில் வரும் சித்ரா பவுர்ணமி. அமாவசைக்கு ஒரு மகாளயம் போன்று, பவுர்ணமிக்கானது சித்திரையில் வருகிறது. இன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குழந்தைப் பேறு, திருமணப் பேறுக்கு வழிசெய்யும், செல்வம் சேர்க்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

சித்ரா பவுர்ணமி
சித்ரா பவுர்ணமி

இது தவிர்த்து கோயில்களுக்கும் பக்தர்கள் படையெடுப்பார்கள். குறிப்பாக, சித்ரா பவுர்ணமி அன்று சித்தர்கள் அனைவரும் பூமியில் உலவுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால், சித்தர்கள் பின்னணியிலான கோயில்களுக்கு பெரும் கூட்டம் சேரும். முழு நிலவு உதயமான பிறகு கிராமங்களின் ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி சமைப்பதும், இறை வழிபாடு நிகழ்த்துவதும், கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்வதும் நம் மரபில் உள்ளது.

இந்த சித்ரா பவுர்ணமியை சிறப்பிக்கும் கொண்டாட்டங்களில், இன்றிரவு பிங்க் மூன் உதயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பிங்க் மூன் என்றதும், வெண்ணிலவை பிங்க் நிறத்தில் எதிர்பார்க்க வாய்ப்பில்லை. வழக்கத்தைவிட பிரகாசம் மற்றும் அளவில் கூடுதலாக நிலா தென்படுவதையே ’பிங்க் மூன்’ என்கிறார்கள்.

வட அமெரிக்க பழங்குடிகள் வாழிடங்களில் இந்த பவுர்ணமியை ஒட்டி பிங்க் வண்ண மலர்கள் பூப்பதால், பிங்க் மூன் என்பது பெயரானது. அறிவியல் அடிப்படையில், சந்திரன் தனது சுற்றுவட்டப்பாதையில் பூமிக்கு மேலும் நெருக்கமாக வருவதே அதன் கூடுதல் பிரகாசம் மற்றும் அளவுக்கு காரணமாகிறது.

சித்ரா பவுர்ணமி
சித்ரா பவுர்ணமி

எனவே சித்ரா பவுர்ணமி கொண்டாட்டத்தின் அங்கமாக, திறந்த வெளியிலோ, மொட்டை மாடியிலோ கூடி பிங்க் மூன் தரிசனம் பெறலாம். பிங்க் மூன் தரிசனமும், அந்த வெளிச்சத்தில் சற்று நேரம் குடும்பத்தினர் அல்லது உறவு, நட்புகளுடன் கழிப்பதும் நல்லது. குடும்பத்தில் இணக்கமும், தம்பதியருக்குள் ரொமான்ஸும் அதிகரிக்கும் என்பது உலகம் முழுக்க நம்பிக்கையாக உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தகவலின்படி, உள்ளூர் நேரப்படி இரவு 7.49 முதல் முழு நிலவு தரிசனம் தொடங்கும். அவரவர் வாழிடங்களுக்கு ஏற்ப இவை மாறுபடலாம். கூடுதல் பிரகாசத்துடனான நிலவின் இந்த தரிசனம் வியாழன் காலை வரையும் பெறலாம். அதாவது செவ்வாய், புதன் என இன்றும், நாளையுமாக 2 இரவுகளை பிங்க் மூன் உடன் கொண்டாடலாம்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in