உயிரிழந்த பாபி
உயிரிழந்த பாபி

உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு... கின்னஸ் அமைப்பு இரங்கல்!

போர்ச்சுகல் நாட்டில் உலகின் மிக வயதான நாய் என்ற அழைக்கப்பட்ட பாபி உயிரிழந்தது. கடந்த 1992 மே 11- ம் தேதி பிறந்த அந்த நாய்க்கு வயது 31.

போர்ச்சுகல் நாட்டினை பூர்விகமாக ரஃபீரோ என்ற இனத்த சேர்ந்த நாய் ஒன்றை லியோனல் கோஸ்டா என்பவர் வளர்த்து வந்தார். பாபி என பெயரிடப்பட்ட அந்த நாயை அவர் 8 வயது முதல் வளர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். 31 ஆண்டுகள் 165 நாள் வரை உயிர் வாழந்த பாபி கடந்த வார இறுதியில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது. பாபி அதிக நாள் உயிர் வாழ்ந்த நாய்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லியோனலுடன் பாபி
லியோனலுடன் பாபி

சராசரியாக 10 முதல் 14 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுள் கொண்ட இந்த வகை நாய் இனத்தில் பாபி எப்படி 31 ஆண்டுகள் வாழ்ந்தது என்பது புதிராகவே உள்ளது. ஆனால், அதனை வளர்த்த லியோனல் கோஸ்டா பாபியின் ஆயுளுக்கு காரணம் என்ன என்பதை கூறுகிறார். தனது செல்லப் பிராணிக்கு நல்ல உணவும், தூயக் காற்றும், அதிகப் படியான அன்பும் வழங்கி வந்ததாக அதன் ஆயுளுக்கு காரணம் என்கிறார் லியோனல் கோஸ்டா.

இதற்கு முன் கடந்த 1939- ம் ஆண்டில் உயிரிழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது நாய் தான், உலகின் மிக வயதான நாய் என்று கின்னஸ் சாதனை படைத்திருந்ததாகவும், அதை பாபி முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக வயதான நாய் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்துவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

x
காமதேனு
kamadenu.hindutamil.in