அமெரிக்காவின் துல்லிய தாக்குதல்... சிரியாவில் இயங்கும் இரான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பதிலடி!

அமெரிக்க துருப்புகள்
அமெரிக்க துருப்புகள்

சிரியாவில் இயங்கும் இரான் ஆதரவு தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க வான்படை நேற்று துல்லியத் தாக்குதலில் ஈடுபட்டது.

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் சூழ்ந்துள்ளது. காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக, இரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் சீற்றத்தில் உள்ளன. இரான் ஆதரவிலான லெபனான் ஹிஸ்பொல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது விமானந்தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பி உள்ளது.

வான்படையினர் தாக்குதல்
வான்படையினர் தாக்குதல்

இந்த நிலையில் பிராந்தியத்தில் முகாமிட்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள் மீது இரான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். அக்.17 அன்று தொடங்கி 19 முறை ட்ரோன் தாக்குதலுக்கு, அமெரிக்க நிலைகள் ஆளானதாக அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்தது. இதனையடுத்து, சிரியாவில் இயங்கும் இரான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா குறிவைத்தது.

அதன்படி வியாழன் அன்று கிழக்கு சிரியாவின் இரான் - சிரியா எல்லையில் இயங்கும் இரான் ஆதரவு தீவிரவாத குழுக்களின் 2 நிலைகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாயின. இந்த தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக அமெரிக்காவின் 21 வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அமெரிக்க ஒப்பந்த பணியாளர் ஒருவர் மாரடைப்பில் உயிரிழந்ததாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது.

பென்டகன்
பென்டகன்

இரான் ஆதரவிலான நிதி, பயிற்சி மற்றும் ஆயுதங்கள் மூலம் சிரியாவில் செழித்து வரும் தீவிரவாத குழுக்கள், அமெரிக்க நிலைகள் மீது ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டதற்கான பதிலடியே இந்த நடவடிக்கை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலுக்கும் இந்த துல்லியத் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அங்குள்ள அமெரிக்க துருப்புகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், கூடுதல் வான் பாதுகாப்புக்கான தளவாடங்கள் மற்றும் 900 வீரர்கள் அடங்கிய ராணுவக் குழுவினர் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு விரைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in