ஹைதியில் உள்நாட்டுப் போர் மூளும்... எச்சரிக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில்!

ஹைதி நாட்டில் பெருகும் வன்முறையால் உள்நாட்டு போர் உருவாக வாய்ப்பு
ஹைதி நாட்டில் பெருகும் வன்முறையால் உள்நாட்டு போர் உருவாக வாய்ப்பு

ஹைதி நாட்டில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜொவனெல் மோய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக முக்கிய குழுத் தலைவரும், கேங் லீடருமான ஜிம்மி பார்ப்பெக்கியூ செரிஸியர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவ்வப்போது ஜிம்மி தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு படையினர் மீதும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.

பிரதமருக்கு எதிராக பிரதான கேங் லீடர் தாக்குதல்களை அதிகரித்துள்ளதால் பதற்றம்
பிரதமருக்கு எதிராக பிரதான கேங் லீடர் தாக்குதல்களை அதிகரித்துள்ளதால் பதற்றம்

இதன் உச்சகட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவிற்கு பிரதமர் ஏரியல் ஹென்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஜிம்மி தலைமையிலான குழுவினர் மற்றும் பிற கிளர்ச்சியாளர் குழுக்கள் நாடு முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு சிறைச்சாலைகளை தகர்த்த கிளர்ச்சியாளர்கள், அதில் அடைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுதலை செய்தனர். தற்போது தப்பிச்சென்ற கைதிகள் ஜிம்மி தலைமையிலான குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து அந்த குழுவில் இணைந்துள்ளனர்.

வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள ஹைதி மக்கள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கவலை
வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள ஹைதி மக்கள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கவலை

இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. ஏற்கெனவே நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஏரியல் ஹென்றி நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா கவுன்சில் அதிபர் ஏரியலுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும் ஏரியல் பதவி விலக வேண்டும் என்ற ஜிம்மியின் கோரிக்கை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே வறுமையின் பிடியில் சிக்கி உள்ள ஹைதி மக்கள், உள்நாட்டு போர் ஏற்பட்டால் மேலும் அதிக பாதிப்பிற்கு உள்ளவர்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?! களேபரமான கரூர்!

அட்டைப் படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த சமந்தா...ஃபயர் விடும் ரசிகர்கள்!

போர்க்களமான புதுச்சேரி... ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி... தள்ளு முள்ளுவால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in