குழந்தைகளின் அழுகுரல் கலங்க வைக்கிறது... தமிழக முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

’’மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், படுகாயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன...’’ என்று காசா மீதான தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் சிதிலமான காஸா
இஸ்ரேல் தாக்குதலில் சிதிலமான காஸா

இஸ்ரேல் ராணுவம் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 13 வது நாளாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள கான் யூனிஸ், ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தின. இஸ்ரேலில் இருந்து ஏராளமான ஏவுகணை குண்டுகளும் வீசப்பட்டன.

இதில் 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர். 1,200க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பலரின் கூக்குரல் கேட்கிறது. ஆனால் மீட்க முடியவில்லை என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுத் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் கலங்கடித்துள்ளது.

இந்த நிலையில், காசா மீதான தாக்குதல் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘’போர் என்பதே கொடூரமானது! அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதலில் பலியாவது அப்பாவி பொதுமக்கள் தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், படுகாயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர், உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா? உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கைப் பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்’’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!

அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!

வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!

சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை  மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in